சிறுவயதில் வீட்டில் எந்த நிலையிலிருப்பினும் விழாக்காலம் என்றாலே ஒரே மகிழ்ச்சிதான். குடும்பத்தில் செலவு செய்யும் பணம் முன்பே சேமித்துவைத்ததா, கடன் வாங்கியதா என எந்த விதமான கவலையையும் கொண்டிருக்கவேண்டிய அவசியமில்லாததொரு காலம் அது.
பின்பு, சற்றே வயது ஏற ஏற வீட்டின் வறுமை நிலைமை புரிந்து விழாக்கால செலவுகளை குறைத்து கொண்டாடினாலும், மகிழ்ச்சியில் எந்தவிதமான குறைபாடும் வைக்காமல் கொண்டாடியது ஒரு காலம்.
சிலவருடங்களாக, கைநிறைய ஊதியம் என்றாலும் (உண்மையில் ஊதியத்தை இதுவரை கையில் வாங்கியதில்லை), குடும்பத்தினரின் மகிழ்ச்சிக்கேனும் விழாக்கொண்டாட்டங்கள் நடந்துவந்தன.
இந்த வருடம் அதுவும் இல்லை.......
வேறு ஒன்றும் இல்லை, நம் பங்காளி வீட்டில் இழவு...
புதன், 14 ஜனவரி, 2009
இந்த வருடம் எனக்கு பொங்கல் விழாக் கொண்டாட்டம் இல்லை.
இடுகையிட்டது - மருள்நீக்கி at 1/14/2009 09:30:00 AM
Subscribe to:
கருத்துரைகளை இடு (Atom)
2 மறுமொழிகள்:
மனதை தொட்டுவிட்டிர்கள். எங்களுக்காக உணர்வோடு இருக்கும் உங்களுக்கும் உங்களைப்போன்ற உறவுகளுக்கும் நன்றி
@வெண்காட்டான்
வருகைக்கு நன்றி.
கையாலாகாத நிலையில் இது மட்டுமே என்னால் முடிகிறது
Post a Comment