வெள்ளி, 20 பிப்ரவரி, 2009

வெள்ளை மாளிகை முன்பு தமிழர்களின் கவனயீர்ப்புப் போராட்டம்


வெள்ளிக்கிழமை பிப்ரவரி 20 அன்று, தமிழீழத்தில்
இலங்கை அரசு நடத்திவரும் இனவழிப்பு தாக்குதல்களைக்
கண்டித்து அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை
முன்பு கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.



இந்த கவனயீர்ப்பு போரட்டத்தில் பல்லாயிரக்கணக்கான
மக்கள் கலந்துகொண்டனர்.

கனடா மற்றும் அமெரிக்காவின் பல பகுதிகளில்
இருந்தும் மக்கள் இப்போராட்டதில் பங்கேற்றனர்.





இந்த நிகழ்வில் எதிர்க்குழுவாக சில இலங்கை சிங்களர்கள் சிலரும் மறுமுனையில் இருந்த்னர்.(என்ன, அவர்களை அருகில் சென்று படமெடுக்கத்தான் முடியவில்லை)

வியாழன், 5 பிப்ரவரி, 2009

பாம்புக்குத் தலை, மீனுக்கு வால் -- ‍ இன்போசிசின் நிலை.

Infosys தலைவர் முன்பு சத்யம் நிறுவன ஊழியர்களுக்கு சில அறிவுரைகளை சொன்னார்.

அதன்மீது வலையுலகில் இருவிதமான கருத்துகளில் விவாதக்கும்மி நடந்தது நாம் அறிந்ததே..

இவ்வேளையில்
"சத்யம் நிறுவன வாடிக்கையாளர்கள் சிலர் எங்களை தேடி வந்தனர். அவர்களாகவே வந்துள்ளனர். நாங்கள் யாரையும் அணுகவில்லை.

எங்கள் நிறுவனத்தின் நோக்கங்கள் மற்றும் திட்டத்துக்கு ஒத்து வரும் என்றால் அவர்களை எங்கள் வாடிக்கையாளர்களாக மாற்றி கொள்வோம்
"

என்ற செய்தியை அறிந்தபோது மேற்கண்ட எண்ணம் வருவதை என்னால் தவிர்க்க முடியவில்லை.

ஏன், சத்யம் நிறுவனம் மீதும் அதன் தொழிலாளர்கள் மீதும் அக்கறை இருந்தால் இந்திய மென்பொருள் நிறுவனங்கள் ஏதும் சத்யம் நிறுவன வாடிக்கையாளர்கள் தங்களை அணுகுவதை தவிர்க்கவேண்டும் என்று
சொல்லவேண்டியதுதானே..

செவ்வாய், 20 ஜனவரி, 2009

ஒபாமா ‍ பதவியேற்பு விழா சில புகைப்படங்கள்




கடுங்குளிரையும் பொருட்படுத்தாது ஒபாமா அவர்களின் பதவியேற்பு விழாவிற்கு மக்கள் திரளாக வந்திருந்து விழாவினை சிறப்பித்தனர்.

இந்த வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த நிகழ்ச்சியில் என்னை வெகுவாக கவர்ந்தது, அதிகாரிகளின் இவ்விழாவிற்கான திட்டமிடலே...


வெகுவான இன்னல்களுக்கு மனதை தயார்ப்படுத்திக்கொண்டு சென்ற எனக்கு,
இவ்வளவு சுலபமாக சென்று வீடு வந்து சேர்ந்தது இன்னும் ஆச்சரியத்தினை அளிக்கின்றது.




மேலும் படங்களுக்கு....

OBAMA_INAGURATION


நன்றி.

புதன், 14 ஜனவரி, 2009

இந்த வருடம் எனக்கு பொங்கல் விழாக் கொண்டாட்டம் இல்லை.

சிறுவயதில் வீட்டில் எந்த நிலையிலிருப்பினும் விழாக்காலம் என்றாலே ஒரே மகிழ்ச்சிதான். குடும்பத்தில் செலவு செய்யும் பணம் முன்பே சேமித்துவைத்ததா, கடன் வாங்கியதா என எந்த விதமான கவலையையும் கொண்டிருக்கவேண்டிய அவசியமில்லாததொரு காலம் அது.


பின்பு, சற்றே வயது ஏற ஏற வீட்டின் வறுமை நிலைமை புரிந்து விழாக்கால செலவுகளை குறைத்து கொண்டாடினாலும், மகிழ்ச்சியில் எந்தவிதமான குறைபாடும்
வைக்காமல் கொண்டாடியது ஒரு காலம்.

சிலவருடங்களாக, கைநிறைய ஊதியம் என்றாலும் (
உண்மையில் ஊதியத்தை இதுவரை கையில் வாங்கியதில்லை), குடும்பத்தினரின் மகிழ்ச்சிக்கேனும் விழாக்கொண்டாட்டங்கள் நடந்துவந்தன.

இந்த வருடம் அதுவும் இல்லை.......




வேறு ஒன்றும் இல்லை, நம் பங்காளி வீட்டில்
இழ‌வு...










வியாழன், 8 ஜனவரி, 2009

உலகப் பொருளாதாரம் - ஒரு பார்வை

கூகிள் ஒளிப்படங்களில் சமீபத்தில் நான் பார்த்த, பகிர்ந்துகொள்ள விழைந்த
ஓர் ஒளிப்படக்காட்சி உங்களின் பார்வைக்காக...




நன்றி


Global Imbalance - An imminent Dollar Crisis
Lecture by CA M.R. Venkatesh, Chennai Part of INDIA RE-DISCOVERED A Seminar on Global Economy By SWADESHI JAGARAN MANCH and VISION INDIA TRUST